சேலம் மாவட்டத்தில் கொரோனா சிகிச்சை மையம் நாளை முதல் சித்த மருத்துவர்களால் செயல்பட உள்ளது.
உலகெங்கிலும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தற்போது அனைத்து மாவட்டங்களிலும் பொது இடங்களில், வணிக நிறுவனங்கள் மற்றும் உணவகங்கள் போன்ற இடங்களில் சமூக இடைவெளிகள் கடைபிடிப்பது மற்றும் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சேலம் மாநகராட்சி பகுதிகளில் வைரஸ் தொற்றை தடுக்கும் முறையில் ஏற்கனவே மணியனூரிலுள்ள அரசு சட்டக் கல்லூரியில் கொரோனா சிகிச்சை மையம் செயல்பட்டு வந்துள்ளது.
இதனையடுத்து தற்போது கோரிமேட்டிலுள்ள அரசு பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சித்த மருத்துவர்களால் கொரோனா சிகிச்சை வழங்கும் மையம் தற்காலிகமாக அமைக்கும் பணி நடைபெற்றுள்ளது. இந்த பணிகளை மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார். அப்போது அவர் 100 படுக்கை வசதிகளுடன் கூடிய தற்காலிக மையம் நாளை முதல் செயல்படும் என தெரிவித்துள்ளார்.