Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“கொரோனா” சித்த மருத்துவம் சூப்பர்…. நல்ல பலன்….. மாநகராட்சி கமிஷனர் பேட்டி….!!

சென்னையில் கொரோனாவை குணப்படுத்த சித்த மருத்துவத்தை விரிவுபடுத்தவுள்ளதாக மாநகராட்சி கமிஷனர் தெரிவித்துள்ளார்.

சென்னை சாலிகிராமம் பகுதியில் அமைந்துள்ள ஜவஹர் இன்ஜினியரிங் கல்லூரி ஆனது கொரோனா வார்டாக மாற்றப்பட்டு, அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுக்கு அங்கே சித்த மருத்துவ முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அனுமதிக்கப்பட்ட 234 பேரில் 30 பேர் இந்த சிகிச்சையால் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இவர்களை பத்திரமாக வீட்டிற்கு அனுப்பி வைக்கும் நிகழ்ச்சியில் சென்னை மாநகர கமிஷனர் பிரகாஷ் கலந்துகொண்டார்.

பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு சென்னையில் அதிகரித்துக் கொண்டே வருவதால், சிகிச்சை அளிக்கும் மையங்களில் கூடுதல் படுக்கை வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இங்கே இவர்களுக்கு ஆங்கில மருத்துவத்துடன் சித்த மருத்துவ முறையில் சிகிச்சை அளிக்கப் போவதாகவும் தெரிவித்தார். மேலும் சித்த மருத்துவம் நல்ல பலன் அளிப்பதாகவும், அதனை விரிவுபடுத்த திட்டமிட்டு வருவதாகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த சித்த மருத்துவ சிகிச்சை முறையால் பாதிக்கப்பட்ட 744 பேரில் 539 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி விட்டதாக தெரிவித்த அவர், மழைக்காலம் தொடங்க இருப்பதால் டெங்கு கொசுவை விரட்டும் பணியிலும் அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளிலும் 3,500 களப்பணியாளர்கள் பணிபுரிய தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

Categories

Tech |