நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நோய்த்தொற்றை தடுக்க ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதால் அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு மத்தியில் கொரோனா மூன்றாவது அலை பரவலாம் என்று கூறப்படுகின்றது.
இந்நிலையில் நாட்டின் கொரோனா 3சூழல் குறித்து பிரதமர் மோடி தலைமையில் இன்று மாலை ஒன்றிய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.