அமெரிக்க அரசு அடுத்து வரும் வாரங்களில் 15 கோடி கொரோனா வைரஸ் சோதனை கருவிகளை வினியோகம் செய்யும் என அமெரிக்க ஜனாதிபதி கூறியுள்ளார்.
உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. இந்த நிலையில் வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “வரவுள்ள வாரங்களில் 15 கோடி அபோட் விரைவான புள்ளி பராமரிப்பு சோதனைக் கருவிகளை வினியோகம் செய்யும் திட்டம் அறிவிக்கப்படும். அந்தக் கருவிகள் நர்சிங் ஹோம்,வீட்டு சுகாதார மற்றும் நல்வாழ்வு பராமரிப்பு மையங்கள் உள்ளிட்ட கொரோனாவால் மிகவும் பாதிக்க கூடிய பகுதிகளுக்கு 5 கோடி சோதனை கருவிகள் எடுத்துச் செல்லப்படும்.மேலும் வரலாற்று ரீதியில் பிளாக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மற்றும் பழங்குடி தேசிய கல்லூரிகளுக்கு 10 லட்சத்திற்கும் மேற்பட்ட கருவிகள் அனுப்பப்பட உள்ளது.
நாம் இதனை தொடங்கிய சில நாட்களிலேயே நாம் அனைவரும் கொரோனா பாதிப்பில் இருந்து விடுபடுவோம் என்பதை அனைவரும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அதுமட்டுமன்றி பொருள் ஆதாரங்களையும் மற்றும் பள்ளிகளையும் உடனடியாக மீண்டும் திறக்கக்கூடிய முயற்சியாக பத்துக்கோடி சோதனை கருவிகள் மாநிலங்களுக்கு வழங்கப்படும்”என்று அவர் கூறியுள்ளார். அதிபரின் இந்த முடிவு மிகவும் முக்கியமானது. ஏனென்றால் பெற்றோர்களை வேலைக்கு திரும்ப அனுமதி பதிலும் மற்றும் பொருளாதாரத்தை மீண்டும் பெறுவதிலும், பள்ளிகளை மீண்டும் திறக்க அதன் முக்கியத்துவத்தையும் வெள்ளை மாளிகை நிர்வாகம் கூறியுள்ளது.