Categories
மாநில செய்திகள்

“கொரோனா…. டிக்டாக்” அரசியல் வேண்டாம்…. விழிப்புணர்வு தேவை….!!

கொரோனா, டிக்டாக் இந்த இரண்டு விஷயங்களிலும் மக்களுக்கு விழிப்புணர்வு தேவை என்று முன்னாள் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தற்போது இந்திய அளவில் மிகப்பெரிய பேசுபொருளாக இருக்கக்கூடிய விஷயங்களில் டிப்டாக் தடையும், கொரோனாவும் இடம்பெற்றுள்ளது. கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதால் அதுகுறித்த எண்ணங்களும், பேச்சுக்களும் மக்களிடையே அதிகரித்து உள்ளன. அதே சமயத்தில் இத்தனை நாட்களாக மக்களின் சிறந்த பொழுதுபோக்காக பலருக்கு மிகச் சிறந்த நடிப்புத் திறனை காட்டும் தலமாக டிக் டாக் செயலி விளங்கி வந்ததாகவும், அதனுடைய தடை தனக்கு சோகத்தை அளிப்பதாக பலர் புலம்பித் தவித்து வருகின்றனர்.

இது இரண்டும் மக்களிடையே சாதாரணமாக பேசக்கூடிய பேச்சுக்கள். இதைத் தாண்டி பலர் இந்த இரண்டு விஷயங்களையும் அரசியலாக்கி பேசி வருவதாக முன்னாள்  அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார். அதில், வருகின்ற 2021ல் திட்டமிட்டபடி தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வெற்றிகரமாக நடத்தி முடிப்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்த அவர், கொரோனாவை பொறுத்தவரையில் அனைத்து கட்சியினருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது அனைவருக்குமான பாதிப்பு இதனை அரசியலாக்க வேண்டாம். டிக் டாக்கை பொறுத்தவரையில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு தேவை என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |