உலக நாடுகளில் இந்தியா மட்டும்தான் கொரோனா பேராபத்துக் காலத்தில் இலவசங்கள் வழங்கவில்லை என்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்து இருக்கிறார். எனினும் நாட்டிலுள்ள 80 கோடி மக்களுக்கு இலவச ரேஷன்பொருட்களை வழங்கி அரசு உதவி இருக்கிறது என்றார். பிரதமர் நரேந்திரமோடியின் பிறந்தநாளான இன்று உத்தரப்பிரதேசத்தில் பொருட்காட்சி ஒன்றைத் தொடங்கி வைத்துப் பேசிய யோகி ஆதித்யநாத் இதை தெரிவித்தார்.
பொருட்காட்சியினை துவங்கிவைத்து யோகி ஆதித்யநாத் பேசியதாவது “உலக நாடுகளில் இந்தியா மட்டுமே மக்களுக்கு கொரோனா பேராபத்துக் காலத்தில் இலவசங்கள் எதுவும் கொடுக்கவில்லை. தேவை எழுந்தபோது நாட்டிலுள்ள 80 கோடி மக்களுக்கு இலவச ரேஷன் பொருள்கள் மட்டும் வழங்கப்பட்டது. அத்துடன் இலவசமாக 200 கோடி தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டது. கொரோனா பேராபத்துக்காலத்தில் இந்தியா மட்டுமே எந்தஒரு கலக்கமும் இன்றி பெருந்தொற்றை எதிர்கொண்டது. இதற்கென அனைத்து பாராட்டுகளும் பிரதமர் நரேந்திர மோடியையே சேரும்” என்று கூறினார்.