Categories
மாநில செய்திகள்

கொரோனா தடுப்பு உபகரணங்களை…. பொதுமக்களுக்கு வழங்கினார் ஸ்டாலின்…!!!

நாடு முழுதும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. . இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோன நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

அந்த வகையில் தமிழகத்தில் கொரோனா  பாதிப்புகள் அதிகரித்துக்கொண்டு வருகிறது. நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகரித்துக் கொண்டு வருகிறது. இதற்கு மத்தியில் ஆக்சிஜன் குறைபாட்டின் காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் சென்னையின் பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு 30 முட்டைகள், முகக்கவசம் அடங்கிய கொரோனா தடுப்பு உபகரணங்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

Categories

Tech |