Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கை… இதுவரை போடப்பட்ட தடுப்பூசிகள்… மாவட்ட நிர்வாகம் தகவல்..!!

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனா தடுப்பூசி 615 பேருக்கு போடப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று கோவேக்சின் கொரோனா தடுப்பூசி 48 பேருக்கும், கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி 567 பேருக்கும் என மொத்தம் 615 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை 587 பேருக்கு கோவேக்சின் கொரோனா தடுப்பூசியும், 31 ஆயிரத்து 689 பேருக்கு கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசியும் என மொத்தம் 33 ஆயிரத்து 276 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் 10 கோவேக்சின் தடுப்பூசியும், 940 கோவிஷீல்டு தடுப்பூசியும் கையிருப்பில் உள்ளது என்று மாவட்ட நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.

Categories

Tech |