Categories
மாநில செய்திகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கை…. சுகாதாரத்துறையினருடன் முதல்வர் ஆலோசனை…!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா  கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடமையாக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். இதையடுத்து கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக மே-10 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இந்நிலையில் மக்கள் ஊரடங்கு விதிகளை மீறுவதாக அனைத்து கட்சி கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதையடுத்து முழு ஊரடங்கு நடவடிக்கைகள் மேலும்  தீவிரப்படுத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்தும் மேலும் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தது. இந்நிலையில் கொரோனா தடுப்பு குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோருடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |