தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வருகிற செப்டம்பர் 15ஆம் தேதி நீட்டிக்கப்பட்டு இருந்தது. இதனிடையில் பள்ளி, கல்லூரிகள் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் திறக்கப்பட்டு மாணவர்கள் சுழற்சிமுறையில் பள்ளிக்குச் சென்று வருகின்றனர். பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு பல்வேறு மாவட்டங்களில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தொற்று பாதிக்கப்பட்டு வருகின்றது.
தற்போது வரும் 15ம் தேதியுடன் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நிறைவடைய உள்ள நிலையில் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் ஊரடங்கில் மேலும் சில தளர்வுகள் வழங்குவது தொடர்பாக தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர், டிஜிபி ஆகியோருடன் முதல்வர் முக ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதுமட்டுமில்லாமல் கேரளாவில் கொரோனா தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் தமிழக எல்லையோர மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கலாம் எனவும் கூறப்படுகிறது. பள்ளி, கல்லூரிகளின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.