சீனாவின் வூஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது வரை உலக நாடுகளை உலுக்கி வருகிறது. இதனால் பல்வேறு நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தீவிரப்படுத்தி வருகிறது. மேலும் உலக நாடுகளில் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் ஜெர்மனியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி கிட்டத்தட்ட 75% பேர் முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்தி கொண்டுள்ளனர். மேலும் அரசாங்க தரவுகளின் படி இரண்டு தவணைத் தடுப்பூசியையும் மொத்த மக்கள் தொகையில் 72 சதவீதம் பேர் போட்டு கொண்டுள்ளனர். அதேபோல் ஒரு பூஸ்டர் டோஸை மட்டும் 42% க்கும் அதிகமானோர் போட்டு கொண்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.