தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறைந்துள்ள போதிலும் பாதுகாப்பு கருதி மக்கள் முக கவசம் அணிய வேண்டும் என அமைச்சர் மா.சுப்ரமணியன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை நூற்றாண்டு நூலக வளாகத்தில் முன்னாள் முதலமைச்சர் மூதறிஞர் ராஜாஜி அவர்களின் 50 -ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு புத்தகக் கண்காட்சியை அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன் மற்றும் மா.சுப்பிரமணியன் போன்றோர் தொடங்கி வைத்தனர். அதன்பின் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, தமிழகத்தில் முக கவசம் அணிய வேண்டும் என்கிற உத்தரவு தொடர்ந்து நடைமுறையில் இருக்கிறது.
மேலும் தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறைந்துள்ள போதிலும் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி முக கவசம் அணியவேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதனையடுத்து அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியபோது, ராஜாஜியின் பேரன் தமிழக முதல்வரிடம் வைத்த கோரிக்கையினை ஏற்று அவருடைய புகைப்பட கண்காட்சியை தமிழக அரசு திறந்து வைத்துள்ளதாக கூறியுள்ளார். மேலும் தி.மு.கவின் கொள்கைகளுக்கு மாறுபட்ட கொள்கை கொண்ட ராஜாஜி அவர்களுக்கு புகைப்படக் கண்காட்சியை தமிழக அரசு வைத்துள்ளது தொடர்பான கேள்விக்கு அமைச்சர் பதில் அளித்துள்ளார்.