Categories
தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கை…. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு மாஸ்க் கட்டாயம்..!!

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி அறிவுறுத்தியுள்ளார். ஜனவரி 1 புத்தாண்டு, வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், 9 கவுண்டர்களில் ஜனவரி 1ஆம் தேதி மதியம் 2 மணி முதல் வைகுண்ட ஏகாதசிக்கான இலவச தரிசன டிக்கெட் வழங்கப்படும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

Categories

Tech |