திருப்பூர் தொடர்ந்து ஈரோட்டிலும் கிருமிநாசினி சுரங்க பாதை அமைக்கப்பட்டுள்ளது.
காய்கறி சந்தைக்கு வரும் மக்களுக்கு இந்த சுரங்கப்பாதை வழியாக ஐந்து வினாடிகள் சென்றாலே வைரஸ் அழிந்துவிடும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். ஈரோட்டில் நாளுக்குநாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தீவிரமடைந்துள்ளதாகவும் குறிப்பிடுகிறார்.
கொரோனா தமிழகத்தில் பாதித்த மாவட்டங்களில் அதிகம் இருக்கக்கூடிய மாவட்டங்களான ஈரோடு மாவட்டத்தில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது. மொத்தம் 32 பேர் இம்மாவட்டத்தில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் 28 பேர் பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும், பெண் மருத்துவர் உள்ளிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கோவையிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இவர்கள் தவிர 80 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் கண்காணிப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இவர்களில் 50 க்கும் மேற்பட்டோரின் முடிவுகள் இன்னும் வரவேண்டி இருக்கிறது. இது மட்டுமல்லாமல் பாதிக்கப்பட்டவர்கள் உடைய வசிக்கக்கூடிய பகுதிகள் முழுமையாக தற்பொழுது கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டிருக்கிறது.
நேற்று முன்தினம் 16,500 வீடுகளைச் சேர்ந்த 57 ஆயிரம் நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்த சூழ்நிலையில், நேற்று முதல் 25 ஆயிரத்து 500 குடும்பங்களை சேர்ந்த 95 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். சுமார் 50க்கும் மேற்பட்ட வீதிகள் முழுமையாக சீல் வைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு அவர்களை கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டிருக்கிறது.
இந்த பகுதிகளுக்குள் அறிகுறிகள் ஏதேனும் தென்படுகிறதா என்று பணியாளர்கள் தொடர்ந்து ஒரு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதற்கிடையே பொது இடங்களில் கோரோனோ கிருமியை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது. தொற்று ஏற்படாமல் தடுப்பதற்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. குறிப்பாக மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள காய்கறி சந்தைக்கு செல்வோருக்கு கிருமிநாசினி தெளிப்பதற்கும் முயற்சிகளும் எடுக்கப்பட்டு இருக்கிறது.
திருப்பூரை தொடர்ந்து ஈரோட்டிலும் சுரங்க நடைபாதை அமைத்து இதன் வழியாக கிருமிநாசினி தெளிப்பதற்கு நடவடிக்கை மாநகராட்சி நிர்வாகம் எடுத்திருக்கிறது. தனியார் கல்லுரிகளுடன் இணைந்து செயல்பட கூடிய இந்த சுரங்கத்தின் வழியாக ஐந்து விநாடிகள் உள்ளே வந்தாலே ஏதேனும் கிருமித் தொற்று இருந்தால் முற்றிலுமாக அழிக்கப்படும் என்று அதிகாரிகள் நிரூபித்திருக்கிறார்கள்.