பெரம்பலூரில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் சென்றவர்கள் மற்றும் முககவசம் அணியாமல் சென்றவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
தமிழகத்தில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 11-ஆம் தேதி சமூக இடைவெளியை பின்பற்றாமல் சென்ற இரண்டு பேரிடம் ரூ.500 வீதம் 1000 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டது. மேலும் முதல் கவசம் அணியாமல் சென்ற 211 பேரிடம் ரூ.44 ஆயிரத்து 200 அபராதமாக வசூலிக்கப்பட்டது.
மொத்தம் 213 பேரிடம் ரூ. 43 ஆயிரத்து 200 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாள் முதல் கடந்த 11-ம் தேதி வரை சமூக இடைவெளியை பின்பற்றாதவர்கள், முககவசம் அணியாதவர்கள், கூட்ட அரங்கில் இடைவெளிகளை கடைபிடிக்காதவர்கள் ஆகியோரிடமிருந்து ரூ.5 லட்சத்து 49 ஆயிரத்து 800 அபராதமாக வசூலிக்கப்பட்டது. இதில் ரூ. 2 லட்சத்து 62 ஆயிரத்து 100 அபராத தொகை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.