Categories
உலக செய்திகள்

கொரோனா தடுப்பு பணிகள் மோசமாக இருக்கிறது…. பிரதமர் பதவி விலக வேண்டும்…. போராட்டத்தில் இறங்கிய இளைஞர்கள்….!!

மலேசியாவில் இளைஞர்கள் அரசு மோசமான கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என கூறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனை ஒழிப்பதற்காக நாடு முழுவதும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மலேசியாவில் இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுடுள்ளனர்.மேலும்  50,000 பேர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் அரசு அதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் அரசு மோசமான கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது என்று கூறி பிரதமர் முகைதின் யாசின் பதவி விலக வேண்டுமெனவும் கூறி தலைநகர் கோலாலம்பூரில் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கருப்பு உடை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடன் உதவி செய்ய வேண்டுமென்றும் என முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Categories

Tech |