Categories
அரசியல்

கொரோனா தடுப்பு பணிக்கு…. ரூ44,00,00,000….. அரசாணை வெளியிட்ட தமிழக அரசு….!!

கொரோனா தடுப்பு பணிக்காக ரூ 44கோடி நிதியை ஒத்துக்கியதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது 6வது கட்ட நிலையில் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் இதனுடைய பாதிப்பு குறைந்த பாடில்லை. தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தற்போது கொரோனா பாதிப்பானது தமிழகத்தில் 98 ஆயிரத்தை கடந்த நிலையில், இதை எதிர்த்து தொடர்ந்து போராடும் மருத்துவர்கள், செவிலியர்கள்,

துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு உணவு பொருட்களை வழங்குவது, அவர்களுக்கு தங்குவதற்கான இடவசதியை மேம்படுத்துவது அவர்களுக்கு சம்பளம் அளிப்பது, அதேபோல் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு உணவளிப்பது அவர்களுக்கான சிகிச்சை முறைக்கான செலவு உள்ளிட்ட ஏராளமான வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதற்காக ரூபாய் 44 கோடி ஒதுக்கீடு செய்ததற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

 

Categories

Tech |