கொரோனா தடுப்பூசிக்கான விலையை மாடர்னா நிறுவனம் தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
உலக மக்கள் எல்லோரும் கொரோனா வைரஸுக்கு தீர்வாக தடுப்பூசி ஒன்றை எண்ணி காத்துக்கொண்டுள்ளனர். பல்வேறு தடுப்பூசிகளும் இறுதிக்கட்ட பரிசோதனையில் தான் இருந்து வருகின்றன. ஆனால் உலக சுகாதார அமைப்பால் தற்போது வரை எந்த தடுப்பு மருந்துக்கும் அங்கீகாரம் கொடுக்கப்படவில்லை. இந்நிலையில் அமெரிக்க நிறுவனம் மாடர்னா தயாரிக்கும் தடுப்பு மருந்து 95% வெற்றி பெற்றுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
எனவே கூடிய சீக்கிரம் இந்த மருந்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரலாம் என்று நம்பப்பட்டு வருகிறது. இதையடுத்து இந்த தடுப்பு மருந்தின் விலை ரூ.1800 முதல் ரூ.2750 வரை விற்கப்பட உள்ளதாக அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பல்வேறு நாடுகளும் இந்த தடுப்பு மருந்து வாங்க தீவிரம் காட்டி வருகின்றன.