Categories
உலக செய்திகள்

“கொரோனா தடுப்பு மருந்து” இந்த பாதிப்பை ஏற்படுத்துமா… விளக்கமளித்த நிபுணர்….!!

கொரோனா  தடுப்பூசி தயாரான நிலையில் இதுகுறித்து பலருக்கு பல சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளது.

கனடாவில் கொரோனாவிற்கான தடுப்பூசி போடப்பட இருக்கிறது. இந்நிலையில்  கனடாவை சேர்ந்த ஒருவர்  கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார். அவர்  கேட்டதாவது மனித உடலில் டி ஆக்சி ரிபோ நியூக்ளிக் அமிலம் அதாவது (டிஎன்ஏ) இருக்கும் நிலையில் கொரோனா  தடுப்பூசியில் கொரோனா  வைரஸ் தடுப்பூசியில்  மெசேஞ்சர் ரிபோ நியூக்ளிக் அமிலம் அதாவது     (எம்ஆர்என்ஏ ) உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் எதுவும் மாற்றம் ஏற்படுமா  என்றார்.

இதற்கு பதிலளித்துள்ள தொற்று நோயியல் நிபுணர் டாக்டர் செயின் சக்லா  கூறியதாவது, மனித உடலிலுள்ள (டிஎன்ஏ) தான்  (ஆர்என்ஏ) வாக மாறும் எனவும் (ஆர்என்ஏ) எப்போதும் (டிஎன்ஏ) வாக மாற வாய்ப்புகள் இல்லை. இதனால்  மனித உடலில் (டிஎன்ஏ) மாற்றம் உண்டாகும் என்ற பயம் தேவையில்லை என்றார். மேலும் அவர் கூறியதாவது, எச்ஐவி எனப்படும் ஒரு வைரஸ் மட்டும்தான் (ஆர்என்ஏ) விலிருந்து (டிஎன்ஏ) வை உருவாக்கும் எனவே ஒருவருக்கு  (எச்ஐவி) வைரஸால் பாதிப்பு இருந்தால் கூட அவருக்கு கொரனோ தடுப்பூசியால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று விளக்கமளித்துள்ளார்.

Categories

Tech |