Categories
தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணி தீவிரம் – லாவ் அகர்வால் விளக்கம்..!!

கொரோனா  தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் பணி முழுவீச்சில் நடைபெறுவதாக மத்திய சுகாதாரத்துறை  கூடுதல் செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

மனிதர்களிடையே கொரோனா மருந்தை பரிசோதிக்கும் அளவிற்கு ஆய்வு முன்னேற்றம் அடையவில்லை என அவர் கூறியுள்ளார். தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் ஹைட்ரோ குளோரோக்குயின் மாத்திரைகள் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பெருமளவு உதவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பரிசோதனைக்காக இதுவரை 44 தனியார் ஆய்வகங்களுக்கு அனுமதி அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

கொரோனோவுக்கு சிகிச்சை தருவது குறித்து நாடு முழுவதும் உள்ள மருத்துவர்களுக்கு ஒருங்கிணைந்த பயிற்சி தரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிக்க தனி மருத்துவமனைகள் ஏற்பாடு செய்யப்படும் எனவும் மாநில அரசுகளிடம் பேசி வருவதாகவும் அவர் அறிவித்துள்ளார். சமூக விலகலை கடைபிடிப்பது மட்டுமே தொற்றிலிருந்து பரவல் தடுக்க கைகொடுக்கும் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Categories

Tech |