அமெரிக்காவின் Pfizer நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியை -70 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் பராமரிக்க வேண்டும் என்றும் இது கிராமப்புற பகுதிகளில் மிகவும் கடினம் என்றும் எய்ம்ஸ் இயக்குனர் திரு. ரன்தீப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் Pfizer நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பு மருந்து 90% வைரஸ் தொற்று ஏற்படாமல் தடுக்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளதாக நேற்று முன்தினம் Pfizer நிறுவனம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் Pfizer நிறுவனம் தயாரித்துள்ள இந்த தடுப்பூசியின் விலை அதிகமாக இருக்கும் என்றும் அதனை பராமரிப்பது மிகவும் கடினம் என்றும் டெல்லி எய்ம்ஸ் இயக்குனர் திரு. ரன்தீப் தெரிவித்துள்ளார்.
Pfizer நிறுவனம் தயாரித்துள்ள MRNA தடுப்பூசியை -70 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கும் குறைவான வெப்பநிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும் இந்த குளிரூட்டும் வசதி பல பெரு நகரங்களிலும் கூட இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் இந்தியாவில் உள்ள கிராமப்புறங்களில் இந்த தடுப்பூசியை பராமரிப்பது மிகவும் என்றும் தெரிவித்துள்ளார்.