ஐரோப்பிய மருந்து நிறுவனத்திடம் 12 வயதினருக்கு கொரோனா தடுப்பூசிகளை போட பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலகில் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனிடையே ஐரோப்பிய நாடுகளில் 16 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஐரோப்பிய மருந்து நிறுவனத்திடம் அமெரிக்க பன்னாட்டு மருந்து நிறுவனமான பைசரும், ஜெர்மனியை சேர்ந்த பயோஎன்டெக் நிறுவனமும் சேர்ந்து கொரோனா தடுப்பூசிகளை 12 வயதினருக்கு செலுத்த விண்ணப்பித்துள்ளது. மேலும் அமெரிக்க பன்னாட்டு மருந்து நிறுவனமான பைசர் அமெரிக்க உணவு மற்றும் மருந்து அமைப்பிடம் எங்களது தடுப்பூசிகளை பயன்படுத்துமாறு விண்ணப்பித்துள்ளது.