அமெரிக்க சுகாதார நிறுவனம் மாடர்னா மற்றும் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளால் ஏற்படும் எதிர்விளைவுகளை கண்டறிய ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளது.
அமெரிக்காவில் மாடர்னா மற்றும் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட பிறகு ஒவ்வாமை பிரச்சனைகள் ஏற்பட்டதால் எதிர்விளைவுகளை கண்டறிய அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனம் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது. இது குறித்து அமெரிக்க சுகாதார நிறுவனம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஜனவரி மாதத்தில் ஒரு மில்லியன் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதில் 11.1 என்ற விகிதத்தில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளது.
மேலும் இந்த ஆய்வில் 18 முதல் 60 வயதிற்குட்பட்ட 3400 பேர் பங்கேற்க உள்ளனர் என்றும் அவர்களில் 60 சதவீதம் பேர் ஒவ்வாமை எதிர்வினையை கொண்டவர்கள் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் தடுப்பூசி பங்கேற்பாளர்கள் சீரற்ற முறையில் நியமிக்கப்படுவார்கள் என்றும் யாருக்கு எந்த தடுப்பூசி செலுத்தப்படுகிறது என்பது பங்கேற்பாளர்களுக்கும் குழுவினருக்கும் தெரியாது எனவும் தெரிவித்துள்ளது.
அமெரிக்க சுகாதார நிறுவனம் ஒவ்வொரு பங்கேற்பாளர்களுக்கும் 2 டோஸ் தடுப்பூசிகள் வழங்கப்படும் என்றும் 90 நிமிடங்கள் ஆய்வாளர்களால் கவனிக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் ஒவ்வொரு தடுப்பூசி செலுத்தப்பட்ட முன்பும் பின்பும் பங்கேற்பாளர்களின் ரத்தம், சிறுநீர், நாசி துணி ஆகியவை ஆய்வு செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளது.