அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாட்டில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்துகளுக்கு ஈரான் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடந்து கொண்டிருக்கிறது. இதனை அடுத்து இந்தியாவின் கொரோனா தடுப்பூசி ஒத்திகை தொடங்கியுள்ளது.
இந்நிலையில் உலக நாடுகள் அனைத்தும் கொரோனா தடுப்பூசிகளை பெறுவதில் தீவிரம் காட்டி வருகின்றனர். ஆனால் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாட்டில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்துகளுக்கு ஈரான் தடை விதித்துள்ளது. இரு நாடுகளிலும் அதிகபட்ச இறப்புகள் இருப்பதால் மருந்துகள் மீது நம்பிக்கை இல்லை என்றும் பைஸர் தடுப்பூசிகளை அமெரிக்காவில் போடாமல் ஏன் மற்ற நாடுகளுக்கு கொடுக்க வேண்டும் என்றும் அந்நாட்டு தலைவர் அறிக்கை அலி கோமேனி கேள்வி எழுப்பியுள்ளார்.