நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் மாதம் கொரோனா பரவல் கோரத்தாண்டவம் ஆடி வந்தது. இதையடுத்து சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது மீண்டும் கொரோனா வேகமெடுத்து வருகிறது. இதற்கு மத்தியில் தடுப்பூசியும் போடப்பட்டு வருகிறது. அந்தவகையில் உத்தரப்பிரதேசம் மாநிலம் ஷாம்லி மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. அப்போது மூன்று வயதான பெண்களான சரோஜ், அனார்கலி, சத்தியவாதி ஆகியோர் தடுப்பூசி செலுத்துவதற்காக சென்றுள்ளனர்.
இவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முதல் மாடியிலுள்ள மையத்திற்கு செல்லாமல் அதற்கு பதிலாக ஓடிபி க்கு சென்றுள்ளனர். அங்கிருந்த மருந்தாளர் வேலை காரணமாக புறப்பட்டுச் சென்றுள்ளார். இதையடுத்து அங்கிருந்த ஜன் ஆஸாதி கேந்திராவின் மருந்தாளர் அவர்களுக்கு ராபிஸ் தடுப்பூசிகளை வழங்கியுள்ளார். இதையடுத்து கவனக்குறைவு காரணமாக இவ்வாறு செய்த மருந்தாளர் இடைநீக்கம் செய்ய தலைமை மருத்துவ அதிகாரிக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இதில் பாதிக்கப்பட்ட ஒருவரான அனார்கலி கூறுகையில், நாய் கடித்தால் போடப்படும் ராபீஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது தான் தனக்கு நோய்தொற்று ஏற்பட்டதற்கு காரணம் என்றும், இதனால் வீட்டிற்கு சென்றதும் மயக்கம் வந்ததாகவும் கூறியுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.