கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஒரு கிராமத்தில் கடந்த ஒரு வாரமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் அந்த கிராமத்திற்கு சென்று ஏமாற்றத்துடன் திரும்பி வருகின்றனர். அப்படி அங்கு என்ன நடக்கின்றது என்பதைப்பற்றி இதில் தெரிந்துகொள்வோம்.
உலகையே புரட்டிப் போட்ட கொரோனா தொற்றில் இருந்து விடுபடுவதற்கு தடுப்பூசி மட்டுமே தீர்வாக உள்ளது. பல இடங்களில் தற்போது மக்கள் ஆர்வமுடன் வந்து தடுப்பூசிகளை போட்டுக் செல்கின்றனர். சில பகுதிகளில் கோரோனா தடுப்பூசி பற்றிய அச்சம் மக்களிடையே தொடர்ந்து இருந்து வருகின்றது. கர்நாடக மாநிலம், யாதகிரி மாவட்டம், ஒனகெரே என்ற கிராமத்தை சேர்ந்த மக்கள் கொரோனா தடுப்பு ஊசி போடுவதற்கு பயந்து ஆண்கள் மட்டுமல்லாமல் பெண்களும் மது குடிக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது.
அவர்கள் மது குடித்தால் தடுப்பூசி போட மாட்டார்கள் என்று எண்ணி தினமும் காலையில் எழுந்தவுடன் மதுவை அருந்தி விடுகின்றனர். இதனால் கடந்த ஒரு வாரமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் அந்த கிராமத்திற்கு சென்று ஏமாற்றத்துடன் திரும்பி வருகின்றனர். இதுகுறித்து அவர்கள் மாவட்ட சுகாதாரத் துறையினரிடம் முறையீடு செய்துள்ளனர்.