டென்மார்க்கில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட நபர்கள் பக்க விளைவுகள் ஏற்பட்டதாக அரசிடம் இழப்பீடு கோரியுள்ளனர்.
டென்மார்க்கில் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்ட சுமார் 37 நபர்களுக்கு பக்கவிளைவுகள் ஏற்பட்டதால் இழப்பீட்டு தொகை கேட்டு கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இதில் அதிகமான வழக்குகள் அஸ்ட்ராஜெனகா தடுப்பூசியினால் ஏற்பட்ட விளைவுகள் தான். இது தொடர்பாக சுமார் 29 பேர் இழப்பீடு கேட்டு விண்ணப்பித்திருக்கின்றனர்.
மேலும் பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களில் 8 நபர்கள் இழப்பீடு கேட்டுள்ளனர். அதாவது டென்மார்க்கில் தடுப்பூசி செலுத்தி கொண்ட சில நபர்களுக்கு பக்கவாதம், கருச்சிதைவு, இரத்த உறைவு மற்றும் உயிரிழப்பு கூட நேர்ந்துள்ளது. அதாவது டென்மார்க்கில் மக்கள் மருந்து ஏதேனும் எடுத்துக்கொண்டு கடும் பக்க விளைவுகளை சந்தித்தால் அவர்களுக்கு அரசாங்கத்தால் இழப்பீடு அளிக்கப்படும்.
மேலும் உயிரிழந்த நோயாளிகளின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கப்படுகிறது. அதாவது பக்க விளைவுகளை ஏற்படுத்தாத மருந்துகளே இல்லை என்ற நிலையிலும் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியினால் பக்கவிளைவு அடைந்த மக்கள் புகார் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இரத்த உறைவு பிரச்சனை பரபரப்பை ஏற்படுத்தியதால் ஐரோப்பாவிலேயே முதல் நாடாக டென்மார்க் ஆஸ்ட்ராஜெனகா தடுப்பூசிக்கு முழுவதுமாக தடை விதித்திருக்கிறது