இஸ்ரேலில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 62 பேருக்கு இதயத்தில் தசை வீக்கம் ஏற்பட்டது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா, ஜெர்மனி நிறுவனத்தின் தயாரிப்பான Pfizer Inc. மற்றும் BioNTech SE கொரோனா தடுப்பூசியை இஸ்ரேலில் உள்ள சுமார் 5 மில்லியன் மக்களுக்கு செலுத்தியுள்ளனர். இந்த தடுப்பூசி போட்டுக்கொண்ட 62 பேருக்கு இதயத்தில் தசை வீக்கம் போன்ற பிரச்சனை ஏற்பட்டுள்ளது. பின்னர் அவரக்ளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். மீதம் உள்ள நபர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனையடுத்து தடுப்பூசி போட்டுக்கொண்ட அனைவரும் பெரும் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் இஸ்ரேலின் சுகாதாரத்துறை அமைச்சகம் இந்த மருந்தை தடை செய்யும் அளவிற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், இதில் ஏற்படும் பாதிப்பை விட பயன்கள் அதிகம் இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் இந்த பிரச்சனை அரிதாகவே ஏற்படும் என தெரிவித்துள்ளார். எனினும் Pfizer Inc. மற்றும் BioNTech SE தடுப்பூசிகளை ஆய்வு செய்வதாக இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது.