பிரான்சில் கொரோனா தடுப்பூசியை பிரபலங்களுக்கு முன்னுரிமை கொடுத்து போடப்பட்ட பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா தடுப்பூசி பிரபலங்களுக்கு முன்னுரிமை கொடுத்து முதலில் போடுவதாக பிரான்ஸ் மருத்துவமனை ஒன்றில் சர்ச்சைக்குரிய செய்தி வெளியாகியுள்ளது. பிரான்சில் கொரோனா தொற்று கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசி போடப்பட்டு கொண்டிருக்கும் நிலையில் அந்நாட்டின் தலைநகரமான பாரிசில் இருக்கும் அமெரிக்கன் ஹாஸ்பிடல் ஆஃப் பாரிஸ் மருத்துவமனையில் முன் பதிவு செய்தவர்களை காத்திருக்க செய்துவிட்டு பிரபலங்களுக்கு முதலில் முன்னுரிமை கொடுத்து போடப்படுவதாக தகவல் ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா தடுப்பூசியை முதலில் மிகவும் பாதிக்கப்பட்டோருக்கு முன்னுரிமை கொடுத்து வழங்க வேண்டும் என்று அண்மையில் சுகாதார அமைச்சர் ஆலிவர் வேரன் தெரிவித்திருந்தார் . இந்நிலையில் கிட்டத்தட்ட 20 பிரபலங்களுக்கு அமெரிக்கன் ஹாஸ்பிடல் ஆப் பாரிஸ் மருத்துவமனையில் முன்னுரிமை வழங்கி தடுப்பூசி போடப்பட்டதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.