Categories
உலக செய்திகள்

கொரோனா தடுப்பூசியுடன் கஞ்சா… எங்கே தெரியுமா?…!!!

வாஷிங்டன் டிசி கொரோனா தடுப்பூசி தளங்களில் இலவசமாக கஞ்சா வழங்க முடிவு செய்துள்ளதாக கஞ்சா ஆர்வலர் குழு தெரிவித்துள்ளது.

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், கொரோனா தடுப்பு ஊசி தற்போது மக்கள் பயன்பாட்டிற்கு வந்துவிட்டது. சில நாடுகளில் தடுப்பூசி ஒத்திகை நடந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் வாஷிங்டன் டிசி கொரோனா தடுப்பூசி தளங்களில் இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளதாக டிவி Marijuana Justice கஞ்சா ஆர்வலர் குழு தெரிவித்துள்ளது. நாங்கள் தொற்று நோயின் முடிவை பாதுகாப்பாக கொண்டாட வழிகளை தேடுகிறோம். கஞ்சாவை போல வேறு ஏதும் மக்களுக்கு ஒன்றிணைப்பது இல்லை என எங்களுக்கு தெரியும் என தெரிவித்துள்ளனர்

Categories

Tech |