கொரோனா தடுப்பூசியை அதிகளவில் வீணாக்கி இருக்கும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது. கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசி மருந்துகள் மாநிலங்களுக்கு தடையின்றி விநியோகிப்பட்டு வந்தாலும், பல்வேறு மாநிலங்கள் தடுப்பூசி மருந்துகளை குறிப்பிட்ட அளவு வீணடித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கவலை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிடப்பட்ட அறிக்கையில் தமிழ்நாட்டில் மட்டும் இதுவரை 8.83% தடுப்பூசி மருந்துகள் வீணடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் உள்ள அசாம் மாநிலத்தில் 7.7% கொரோனா தடுப்பூசி மருந்து வீணாகி இருக்கிறது.
மணிப்பூரில் 7.44%, ஹரியானாவில் 5.72%, பஞ்சாபில் 4.98% தடுப்பூசிகள் பயன்படுத்தப்படாமல் பாழாக்கப்பட்டு இருப்பதாக மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது. பீகார், ராஜஸ்தான், நாகலாந்து, மேகாலயா ஆகிய மாநிலங்களில் 4%த்திற்கும் மேல் தடுப்பூசி மருந்துகள் பயன்படுத்தப்படாமல் வீணடிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் 3.96% கொரோனா தடுப்பூசிகள் வீணடிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.