ஆஸ்திரேலயாவுக்கு அனுப்பி வைக்கவேண்டிய கொரோனா தடுப்பூசியை ஐரோப்பிய யூனியன் நிறுத்தி வைத்துள்ளதால் உலகளவில் விவாதம் எழுந்துள்ளது.
ஐரோப்பிய யூனியன் சுமார் 2.5 லட்சம் அஸ்ட்ராஸெனேகா தடுப்பூசிகளை, ஆஸ்திரேலியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படவிருந்த நிலையில் தற்போது நிறுத்தி வைத்துள்ளது. அஸ்ட்ராஸெனேகா நிறுவனம், ஐரோப்பிய யூனியனிடம் கொரோனா தடுப்பூசிக்காக போடப்பட்ட ஒப்பந்தத்தைவிட மிக குறைந்த அளவில் கொடுத்ததாகவும், அதிகம் தாமதப்படுத்தியதாகவும் குற்றசாட்டு எழுந்துள்ளது.
இதனால் ஆத்திரம் அடைந்த ஐரோப்பிய யூனியன் அஸ்ட்ராஸெனேகா தடுப்பூசி ஏற்றுமதிக்கு புதிய புதிய விதிமுறைகளை விதித்துள்ளது.அதனால் ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைக்க வேண்டிய அஸ்ட்ராஸெனேகா தடுப்பூசி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் அதிகமில்லாத சூழலில் 2.5 லட்சம் தடுப்பூசிகள் தேவையில்லை என்று இத்தாலி கூறியதையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக சொல்லப்படுகின்றது.