இந்த வருடத்தின் இறுதிக்குள் அமெரிக்காவில் ஒருநாள் தொற்றுக்கான தடுப்பு மருந்து கண்டறியப்படும் என முன்னணி நிபுணர் பாசி தெரிவித்துள்ளார்
அமெரிக்காவின் மருந்து நிறுவனமான மாடர்னா தயார் செய்தகொரோனா தொற்றுக்கான தடுப்பூசியின் சாத்தியக்கூறு பற்றிய செய்திகள் கடந்த புதனன்று வெளிவந்தது. அச்செய்தியை தொடர்ந்து நாட்டின் முன்னணி நிபுணர் பாசி கூறுகையில் “இந்த வருடத்தின் இறுதிக்குள் கொரோனாவுக்கான தடுப்பூசி கிடைக்குமென கணிக்கப்பட்டுள்ளது. திட்டமிடப்பட்ட கால அட்டவணை குறித்து நான் சரியாகவே உணருகிறேன்.
சீனா அதன் ஆய்வில் முதல் மருந்தை கண்டு பிடிப்பது குறித்து எந்த கவலையும் இல்லை. அனைவரும் ஒரே பாதையில் பயணிப்பதாக நினைக்கின்றேன். நாங்கள் தடுப்பு மருந்தை கண்டறிவதற்கு முன்பு அவர்கள் அதனை பெற்று விடமாட்டார்கள் என்பது நிச்சயம். மற்ற விஞ்ஞானிகள் போன்றே உருவாக்கப்படும் தடுப்பூசியால் எந்த அளவிற்கு நோய் எதிர்ப்பின் தாக்கம் இருக்கும், எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது உள்ளிட்ட பல கேள்விகள் உள்ளது” எனக் கூறியுள்ளார்