சினோபார்ம் தடுப்பூசியை உபயோகிப்பது குறித்து இலங்கை தான் முடிவு செய்ய வேண்டும் என சீனா தெரிவித்துள்ளது.
சீனா தயாரிக்கும் சினோபார்ம் தடுப்பூசியை செலுத்துவதா வேண்டாமா என்பதை இலங்கை தான் முடிசெய்ய வேண்டும் என சீனா அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது குறித்து சீன தூதரகத்தின் தலைவர் கொங் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சினோபார்ம் தடுப்பூசியை இலங்கை அரசாங்கம் கேட்டது என்றும் அதனால் தான் ஆறு லட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் இலங்கைக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த தடுப்பூசியை பயன்படுத்துவது குறித்து இலங்கை தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் அந்த முடிவில் சீனா ஒருபோதும் தலையிடாது எனவும் தெரிவித்தார். மேலும் இலங்கையின் உள்விவகாரத்தில் சீனா ஒன்றும் செய்ய முடியாது என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் இலங்கையில் சீன தடுப்பூசிக்கு எதிராக மருத்துவ நிபுணர்கள் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.