உலக நாடுகளுக்கு கொரோனா தடுப்பு ஊசிகளை கொடுத்து உதவிய இந்தியாவிற்கு பல நாடுகளும் நன்றி தெரிவித்து வருகிறது.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியுள்ளது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளது. அதனால் எதிரான தடுப்பு ஊசிகள் கண்டறியும் முயற்சியில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் தீவிரம் காட்டி வந்த நிலையில் தடுப்பூசிகள் உலகம் முழுவதிலும் போடப்பட்டு வருகிறது. மேலும் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில்கொரோனா வைரஸின் தாக்கம் குறைந்து வந்த நிலையில் தற்போது இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதனால் மக்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளனர்.
இந்நிலையில் பல்வேறு நாடுகளில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது . அதன் காரணமாக பல்வேறு நாடுகளில் கொரோனா தடுப்பூசி போடும் பணி மிக தீவிரமாக நடந்துக்கொண்டு இருக்கிறது.அவ்வாறு பல நாடுகளுக்கு இந்தியா கொரோனா தடுப்பூசிகளை வழங்கி வருகிறது. இதனையடுத்து நியூயார்க்கில் உள்ள ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் இந்திய துணைத் தூதரான கே. நாகராஜ் நாயுடு பங்கேற்றார். அப்போது பேசிய அவர், கொரோனா வைரஸ்க்கு எதிரான போராட்டத்தில் உலக நாடுகள் அனைத்து தவித்து கொண்டு இருக்கும் நிலையில் இந்தியா கைகொடுத்து உதவி வருகிறது.
அதனால் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவி ஷீல்டு ,கோவாக்சி,போன்ற கொரோனா தடுப்பூசிகள் உலக நாடுகளில் 70-க்கும்மேற்பட்ட நாடுகளுக்கு இந்தியா வழங்கியுள்ளது. மேலும் கொரோனா தடுப்பூசிகளின் தன்மை, அணுகல், மலிவு விலை மற்றும் விநியோகம் ஆகியவற்றை நாங்கள் உறுதி அளிக்கிறோம் என்றும் அவர் கூறினார். அதுமட்டுமல்லாமல் எங்கள் சொந்த மக்களுக்கு போடப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை விட உலக அளவில் நாங்கள் வழங்கிய தடுப்பூசிகளின் எண்ணிக்கை அதிகம் என்றும் கூறியுள்ளார். அதனால் கொரோனா தடுப்பூசிகள் பரிசோதனையில் 30 தடுப்பூசிகள் பல்வேறு கட்டங்களில் உள்ளன என்றும் தெரிவித்து உள்ளார்.