Categories
உலக செய்திகள்

கொரோனா தடுப்பூசி கிடைத்த மகிழ்ச்சி…. நடனமாடிய பிரபலம்…. வைரலாகும் வீடியோ….!!

கொரோனா தடுப்பூசி  போட்டுக்கொண்ட உற்சாகத்தில் பிரபல நடனக்கலைஞர் நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பூசி போடும் பணி அனைத்து நாடுகளிலும் தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது கனடாவிலும் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கியது. இந்நிலையில் கனடாவைச் சேர்ந்த பிரபல நடனக்கலைஞர் மற்றும் இசைக் கலைஞருமான குருதிப் பாந்தர் தடுப்பூசி போட்டுக்கொண்டார். அதனை கொண்டாடும் விதமாக கனடா நாட்டில் யுவான் என்ற பகுதியில் உறைந்த ஏரி ஒன்று உள்ளது.அவர் அந்த ஏரியின் மீது பஞ்சாபின் பாரம்பரிய நடனமான பங்க்ரா  நடனமாடி வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் தெ வெளியிட்டுள்ளார். தற்போது அந்த நடனமானது மிகவும் வைரலாகி வருகிறது.

அது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் நான் தடுப்பூசி போட்டுக்கொண்டேன். அந்த மகிழ்ச்சியை கொண்டாடும் விதமாகவும், நம்பிக்கையான எண்ணங்களை ஏற்படுத்தவும் நடனம் ஆடினேன். கனடா முழுவதும் உள்ள மக்களின் எல்லாருடைய உடல்நலத்தில் அக்கறை கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளார். இதனை கேட்ட பயனர் ஒருவர் அனைவரின் உடல் நலம் குறித்து என்னும் தங்களை நினைத்தால் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது தொடர்ந்து இவ்வாறு நடனம் ஆடுங்கள் என்று கூறி மகிழ்ந்துள்ளார்

Categories

Tech |