Categories
தேசிய செய்திகள்

“கொரோனா தடுப்பூசி” குழந்தைகளுக்கு இலவசமாக போடுவோம்…. பிரபல மருத்துவமனையில் அறிவிப்பு….!!

மத்திய அரசு அனுமதி அளித்த பின்பு 18 வயதிற்கு கீழ் உள்ள சிறுவர்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கப்போவதாக அப்பல்லோ மருத்துவமனை அறிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கி வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இவ்வாறு இருக்கையில் 18 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகள் கொரோனாவால் அதிக அளவில் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சில குறிப்பிட்ட இணை நோய்களான கல்லீரல், இதய பாதிப்பு, நரம்பு பாதிப்பு போன்ற நோய்கள் உள்ள குழந்தைகளை கொரோனா தாக்கும் பட்சத்தில் அவர்கள் மிகுந்த அளவில் பாதிக்கப்படுவார்கள்.

எனவே மத்திய அரசு 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போட அனுமதி அளித்த பின்பு அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் இவ்வாறான குழந்தைகளுக்கு இலவசமாக தடுப்பூசி போடுவதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து அப்பல்லோ மருத்துவமனையின் குழும தலைவர் பிரதாப் சி ரெட்டி கூறுகையில், 18 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி அளித்த பின்பு அந்த குழந்தைகளுக்கு கோவக்சின் மற்றும் ஜெய்க்கோவ் டி போன்ற தடுப்பூசிகளை அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் இலவசமாக வழங்கும் என அவர் கூறினார்.

Categories

Tech |