Categories
உலக செய்திகள்

 கொரோனா தடுப்பூசி சவால்… முழு மனதுடன் ஏற்ற இவாங்கா ட்ரம்ப்…!!!

கொரோனா தடுப்பூசி பற்றி டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் விடுத்துள்ள சவாலை தான் ஏற்றுக்கொள்வதாக இவாங்கா டிரம்ப் கூறியுள்ளார்.

அமெரிக்காவில் வருகின்ற நவம்பர் 3ஆம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்க உள்ளது. அதில் போட்டியிடும் டொனால்ட் ட்ரம்ப்பிற்கு ஆதரவாக அவரின் மகள் இவாங்கா டிரம்ப் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றார். இந்த நிலையில் அவர் டிவி நேரலை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவரை பேட்டி எடுத்த தொகுப்பாளர் ஒருவர், தடுப்பு மருந்தை இவாங்கா ஏற்றுக் கொண்டால் தானும் ஏற்றுக் கொள்வதாக கூறினார். அதனால் அந்த தொகுப்பாளரின் பேச்சை இவாங்கா ஏற்றுக் கொண்டார்.

அதுமட்டுமன்றி கொரோனா தடுப்பு மருந்து பற்றி எதிர்க்கட்சியினர் எழுப்பிக் கொண்டிருக்கும் சந்தேகங்கள் மற்றும் புகார்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த சவாலை ஏற்றுக் கொண்டுள்ளார். அச்சமயத்தில் போலியோ போன்ற தொற்று நோய்களுக்கு தடுப்பு மருந்தை கண்டறிய உலகம் நீண்டநாள் எடுத்துக்கொண்டதாக இவாங்கா கூறியுள்ளார்.

Categories

Tech |