இந்தியா முழுவதும் கொரோன இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் அதை ஒழிக்க தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதால் அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக கோவாக்சின், கோவிஷீயீல்டு தடுப்பூசிகள் பரிந்துறைக்கப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. இதையடுத்து 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மக்களும் ஆர்வகமாக தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.
இவ்வாறு முதல் டோஷ் தடுப்பூசி போட்டவுடன் அதற்கான சான்றிதழை மத்திய அரசு வழங்குகிறது. அதில் தடுப்பூசி போட்டுக்கொண்டவரின் பெயர், வயது, பாலினம், கொரோனா மருந்து, தடுப்பூசி போட்டுக்கொண்ட தேதி உள்ளிட்ட விவரங்கள் இருக்கும். தற்போது தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் இந்தச் சான்றிதழை வைத்திருப்பது அவசியமாகும். ஆனால் சிலருக்கு இந்தச் சான்றிதழை எவ்வாறு வாங்குவது என்று தெரியவில்லை. இதை ஆன்லைன் மூலமாகவே மிகச் சுலபமாக இதைப் பதிவிறக்கம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தடுப்பூசி முன்பதிவிற்கான அதிகாரபூர்வ தளமான https://www.cowin.gov.in/ என்றார் வெப்சைட்டில் Sign in/Register பட்டனை கிளிக் செய்யவும். அதில் உங்களது செல்போன் எண்ணை பதிவிட்டு, அதற்கு வரும் ஓடிபி நம்பரையும் பதிவிட்டு உள்நுழைய வேண்டும். LOGIN செய்தவுடன் உங்களது பெயருக்குக் கீழ் ஒரு சர்டிபிகேட் டேப் இருக்கும். அதில் Download பட்டனை கிளிக் செய்தால் கொரோனா தடுப்பூசிக்கான soft copy பதிவிறக்கம் செய்யப்படும்.
உங்களது மொபைல் போனில் ஆரோக்ய சேது மொபைல் ஆப்பை டவுன்லோடு செய்யவும். அந்த ஆப்பை ஓப்பன் செய்து மொபைல் நம்பர் மூலமாக லாகின் செய்யுங்கள். மேல் பக்கத்தில் இருக்கும் CoWin tab கிளிக் செய்யவும். vaccination certificate வசதியைத் தேர்ந்தெடுத்து உங்களது 13 இலக்க beneficiary reference ID நம்பரைப் பதிவிடவும். Download பட்டனை கிளிக் செய்தால் உங்களது தடுப்பூசி சான்றிதழ் பதிவிறக்கம் செய்யப்பட்டுவிடும்.