இந்தியா முழுவதும் கொரோன இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் அதை ஒழிக்க தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதால் அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக கோவாக்சின், கோவிஷீயீல்டு தடுப்பூசிகள் பரிந்துறைக்கப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. இதையடுத்து 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மக்களும் ஆர்வகமாக தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.
இவ்வாறு முதல் டோஷ் தடுப்பூசி போட்டவுடன் அதற்கான சான்றிதழை மத்திய அரசு வழங்குகிறது. அதில் தடுப்பூசி போட்டுக்கொண்டவரின் பெயர், வயது, பாலினம், கொரோனா மருந்து, தடுப்பூசி போட்டுக்கொண்ட தேதி உள்ளிட்ட விவரங்கள் இருக்கும். தற்போது தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் இந்தச் சான்றிதழை வைத்திருப்பது அவசியமாகும். ஆனால் சிலருக்கு இந்தச் சான்றிதழை எவ்வாறு வாங்குவது என்று தெரியவில்லை. வாட்ஸ் அப் மூலமாக ஈசியாக பதிவிறக்கம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
இதற்கு முதலில் MyGov Corona Helpdesk வாட்ஸ் ஆப் எண்ணான +91 9013151515 செல்போனில் save செய்ய வேண்டும். அதன் பின்னர் வாட்ஸ் ஆப்பை OPEN செய்து சேட் பாக்ஸில் அந்த நம்பரை ஓப்பன் செய்து Download Certificate என டைப் செய்து அனுப்பவும். இதன் பின்னர் உங்களது செல்போனுக்கு ஒரு OTP நம்பர் வரும். அந்த நம்பரை வாட்ஸ் ஆப் சேட்டில் டைப் செய்து அனுப்ப வேண்டும். ஒருவேளை ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களுக்கு அந்த மொபைல் நம்பரின் கீழ் தடுப்பூசி போடப்பட்டிருந்தால் எந்த நபருடைய சான்றிதழ் தேவை என்று கேட்கப்படும்.
அதைத் தேர்வுசெய்து அனுப்பினால் தேவையான சான்றிதழ் உங்களது வாட்ஸ் ஆப்பிலேயே அனுப்பப்படும். இதையடுத்து அதை டவுன்லோடு செய்து பிரிண்ட் எடுத்து வைத்துக்கொள்ளலாம். அப்படி இல்லையென்றால் நீங்கள் CoWin வெப்சைட்டிலும் கொரோனா தடுப்பூசி சான்றிதழை பதிவிறக்கம் செய்யலாம்.