Categories
உலக செய்திகள்

கொரோனா தடுப்பூசி செலுத்தினால்… பெண்கள் கருவுறுதலில் பிரச்சனையா…? பேராசிரியர் விளக்கம்…!!

கொரோனா தடுப்பூசிகள் பெண்கள் கருவுருவதை பாதிக்கும் என்று வெளியான தகவல் தவறானவை என்று மகப்பேறியல் பேராசிரியர் விளக்கம் கொடுத்துள்ளார். 

கொரோனாவிற்கு எதிரான தடுப்பு மருந்துகள் பெண்கள் கருவுறுதலை பாதிக்கும் என்று இணையதளங்களில் தகவல் வெளியானது. அதாவது “கொரோனாவிற்கு எதிராக உருவாக்கப்பட்ட pizer நிறுவனத்தின் தடுப்பூசி பெண்களுக்கு மலட்டுத் தன்மையை உருவாக்கும், அல்லது அவர்களின் plecentaவை பாதிப்படையச் செய்யும்” போன்ற தகவல்கள் இணையதளங்களில் பரவி வருகின்றன.

இவை அனைத்துமே தவறான தகவல் என்று கூறிய லண்டனில் கிங்ஸ் கல்லூரியில் மகப்பேறியல் பேராசிரியர் மற்றும் மகப்பேறு மருத்துவர்களின் ராயல் கல்லூரியின் செய்தி தொடர்பாளர் மற்றும் பேராசிரியருமான Lacy Chappell என்பவர் கூறியுள்ளதாவது, இது போன்ற தடுப்பூசிகள் கருவுறுதலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அதிகாரப்பூர்வ உயிரியல் வழிமுறைகள் ஒன்றும் இல்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் தடுப்பூசியானது உடலுக்குள் ஒரு குறுஞ்செய்தியை அனுப்புவது போல செயல்படும்.

இது கொரோனா வைரஸின் சிறிய பாதிப்பு ஏற்படாத ஒரு பகுதியை ஏற்படுத்த அனுமதிக்கிறது. இது நோயெதிர்ப்பு மண்டலத்தை செயல்படத் தூண்டும். அதாவது வைரஸை எதிர்த்துப் போராடுவதற்காக ஆன்டிபாடிகள் மற்றும் ரத்த வெள்ளை அணுக்களை உற்பத்தி செய்கிறது. மேலும் இந்த தடுப்பூசிகளால் எந்த வகையான வைரஸை பரப்ப இயலாது. அது ஒருவரின் சொந்த மரபணுக்களை பாதிப்படையச்செய்யாது. மேலும் “messenger Particles” என்பது மிக சிறிய காலம் தான் மனித உடலில் இருக்கும். அதன் பின்பு அவை அழிந்து விடும் என்று பேராசிரியர் விளக்கம் கொடுத்துள்ளார்.

Categories

Tech |