Categories
உலக செய்திகள்

கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி முடக்கமா ?பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்செய்தியாளர்களை சந்தித்து விளக்கம்..!!

 பிரிட்டன் பிரதமரான போரிஸ் ஜான்சன் செய்தியாளர்களை சந்தித்து தடுப்பூசிகளை பற்றி விளக்கம் அளித்துள்ளார்.

பிரிட்டனில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா கொரோனா தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்வதில் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருப்பதாக தலைமை நிர்வாக அதிகாரி அடர் பூனாவல்லா தெரிவித்தார் .இதனால் தடுப்பூசி போடும் பணி அடுத்த மாதத்திலிருந்து பிரிட்டனில்  முடங்கிவிடும் என்று கூறப்படுகிறது.

இதனை குறித்து பிரதமர் போரிஸ் ஜான்சன் செய்தியாளர்களை சந்தித்து பேசியதில், கொரோனா தடுப்பூசி பிரிட்டனில் மார்ச் மாதத்தை விட ஏப்ரல் மாதத்தில்  சற்று குறைவாக பெறும் என்றாலும் நாடு தடுப்பூசி இலக்குகளை அடைவதற்கான பாதையில் இருக்கும் என்றார். மேலும் அவர் கூறியதில் தடுப்பூசிகள் ஒரு வாரத்திற்கு முன்பு திட்டமிட்டதை விட குறைவாக தான் நாங்கள் பெறுகிறோம் என்றாலும்  தங்களிடம் இருக்கும் தடுப்பூசிகளே நிர்ணயித்த இலக்கை அடைய உதவும் என்று நம்புகிறோம் என்றார்.

மேலும் இதனால் தடுப்பூசி வழங்கும் பணியில்  எந்த மாற்றமும் இருக்காது என்றும் அவர்  கூறினார்.இதனை தொடர்ந்து அவர் கூறியதில் ஏப்ரல் 15 ஆம் தேதிக்குள் 50 வயது மேற்பட்டவர் மற்றும்  மருத்துவ ரீதியாக பாதிக்கப்பட்ட 50 வயதிற்குட்பட்டவர்களுக்கும் தடுப்பூசி முதல் டோஸ் வழங்கப்படும் என்று  கூறினார்.

Categories

Tech |