Categories
உலக செய்திகள்

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட ரஷ்ய அதிபர் ..ரகசியமான முறையில் பெற்றுக்கொண்டார் ..!!

கொரோனா தொற்றுக்கான முதல் தடுப்பூசி டோஸை ரஷ்ய அதிபர் விளாடிமிர்புதின்  செலுத்திக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா தொற்று உலகம் முழுவதும் வேகமாக பரவிக் கொண்டிருக்கும் நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் செவ்வாய்க்கிழமை அன்று கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை  செலுத்திக்கொண்டார் .இந்த தகவலை அவரின் செய்தி தொடர்பாளர்  டிமிட்ரி பெஸ்கொவ்  வெளியிட்டுள்ளார். மேலும் புதின் தடுப்பூசியை எல்லோரும் பார்க்கும்படி நேரலையாக பெற்றுக்கொள்ளவில்லை தனியான முறையில் செலுத்திக்கொண்டதாக கூறப்படுகிறது .

மேலும்  அவர் ரஷ்யாவில் தயாரித்த ஸ்புட்னிக் v ,எபிவக் கொரோனா மற்றும் கோவிவக்  ஆகிய மூன்றில்  எந்த தடுப்பூசியை செலுத்தினார் என்பதை ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து டிமிட்ரி பெஸ்கொவ் கூறுகையில் தடுப்பூசியை  செலுத்தி கொண்ட பிறகு ரஷ்ய அதிபர் நலமுடன் இருப்பதாகவும்,புதன்கிழமை முதல் வேலையில் முழுமையாக ஈடுபடுவார் என்றும் கூறியுள்ளார்.

Categories

Tech |