சென்ற 2020 ஆம் வருடம் முதல் கொரோனா தொற்று பரவி வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தற்போதுவரை கொரோனா பாதிப்புகள் முழுமையாக குறையவில்லை. இதற்கிடையில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியானது தீவிரமாக நடந்து வருகிறது.
தமிழகம் முழுதும் இன்று 1,00,000 மையங்களில் 31-வது சிறப்பு மெகா தடுப்பூசி முகாம் நடந்து வருகிறது. தமிழகத்தில் அதிகளவில் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. இதன் காரணமாக கொரோனா இறப்புகள் குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் தொடர் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையால் 85 % பேருக்கு நோய் எதிர்ப்புசக்தி அதிகரித்துள்ளது.
இந்நிலையில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியிருப்பதாவது “கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியில் மதுரை மாவட்டம் பின்தங்கி இருக்கிறது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் 5 மாதங்களில் தொடங்கும்” என்று தெரிவித்துள்ளார்