நாடு முழுவதும் கொரோன பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் மற்ற நாடுகளில் இருந்து தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன . அதன்படி இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. ஆனால் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுவதால் வெளிநாடுகளுக்கு தடுப்பூசி ஏற்றுமதி செய்வதை தள்ளிவைக்க வேண்டும் என சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார் .
இதுகுறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் , கொரோனாவிற்கு தடுப்பூசி ஒன்று மட்டுமே தீர்வாக உள்ளது . ஆனால் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. தமிழகத்தில் 20 ஆயிரம் முகாம்கள் தொடங்கி 16,43,000 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. இதுவரை 4,37,9,804 நபர்கள் தான் தடுப்பூசி போட்டுள்ளனர். இந்தியாவில் 139 கோடியில் 18 வயதுக்கு மேற்பட்டோர் 70% உள்ளனர். அதில் இதுவரை இந்தியாவில் 20 கோடி பேர் மட்டுமே இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டு கொண்டுள்ளனர் .
அவ்வகையில் இந்தியாவில் 115 கோடி தடுப்பூசிகள் தேவைப்படுகிறது. இந்நிலையில் உலகின் பல்வேறு நாடுகள் 12 – 18 வயது உடையவருக்கு தடுப்பூசி போட்டுக் கொண்டு இருக்கின்றனர். இந்தியாவிலும் அந்த நடவடிக்கையை விரைவில் கொண்டு வர வேண்டும். இந்தியாவில் இருந்து உற்பத்தி செய்யப்படும் கொரோனா தடுப்பூசிகளை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்வதை தள்ளி வைக்க வேண்டும் அமைச்சர் கூறியுள்ளார் .