ஜெர்மன் அரசு தனது மக்களில் 20 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது என தெரிவித்துள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஜெர்மனியிலும் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் சுமார் 20 சதவீதம் மக்களுக்கு முதல் தடுப்பூசி டோஸ் போடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தடுப்பூசிகள் மூலம் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதா என ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியில் உள்ள மக்களுக்கு 20 சதவீத மக்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது என்றும் அதன் பிறகு கொரோனா அதிகமாக கண்டறியப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளது.
இதுக்குறித்து ஜேர்மன் நோய் எதிர்ப்பியல் துறை தலைவர் Carsten Watzl கூறுகையில் தடுப்பூசிகள் நல்ல எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது என்றும் அதனால் அலட்சியமாக இருக்கக்கூடாது எனவும் மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் இந்த தடுப்பூசி திட்டம் வெற்றி பெற்றது என்றும் மே மாதத்திற்குள் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் எனவும் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து தடுப்பூசிகளால் பக்க விளைவுகள் ஏற்படுவதால் மே மாதத்திற்குள் முழுமையாக போட முடியுமா என்பது தெரியவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.