வெளியுறவுத்துறைச் செயலாளர் ஹர்ஷா ஷ்ரிங்லா கொரோனா தடுப்பூசிக்கான மூன்றாம் கட்ட ஆய்வு பணிகளை இந்தியா நட்பு நாடுகளுடன் நடத்த திட்டமிட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
உலக நாடுகள் கொரோனாவுக்கான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றன. இஸ்ரேல் ,பிரிட்டன், ரஷ்யா ஆகிய நாடுகளில் இறுதிகட்ட ஆய்வுகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வெளியுறவுத்துறைச் செயலாளர் ஹர்ஷா ஷ்ரிங்லா கொரோனா தடுப்பூசிக்கான மூன்றாம் கட்ட ஆய்வு பணிகளை நட்பு நாடுகளுடன் நடத்த இந்தியா திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் கொரோனா தடுப்பூசிக்கான ஆய்வு பணிகளை இந்தியா நட்பு நாடுகளுடன் ஒருங்கிணைத்து நடத்த திட்டமிட்டு வருவதாகவும், மூன்றாம் கட்ட ஆய்வுகளை நட்பு நாடுகளுடன் நடத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார். பல நாடுகள் இந்தியாவிடம் தடுப்பூசி கேட்டு கோரிக்கை விடுத்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.