பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுவதால் ஏற்படும் மார்பக பிரச்சினைகளுக்கு எந்தவித சோதனையும் செய்ய வேண்டாம் என நிபுணர்கள் கூறியுள்ளார்கள்.
அமெரிக்க நாட்டில் மாடர்னா மற்றும் ஃபைசர் தடுப்பூசி போட்டுக் கொண்ட பெண்களுக்கு மார்பகத்தில் கட்டி போன்ற வீக்கம் ஏற்படுவதையடுத்து, அக்கட்டிகள் மார்பக புற்றுநோய் பற்றிய அச்சத்தை எழுப்புவதாக கூறியுள்ளார்கள். இந்நிலையில் அமெரிக்க மருத்துவர்கள் கூறியுள்ளதாவது கோவிட் 19 தடுப்பூசி போடுபவர்களுக்கு நிணநீர் மண்டலத்தில் வீக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறியதையடுத்து இச்செய்தி அல்ட்ராசவுண்ட் மற்றும் மேமோகிராம் மார்பக புற்றுநோய் சோதனை திரையில் கண்டறியப்பட்டது என்று கூறியுள்ளார்கள்.
மேலும் பொதுவாக காய்ச்சல் மற்றும் பெரியம்மைக்கான தடுப்பூசி நிணநீர் மண்டலத்தினை பெரிதாக்கும் திறன் கொண்டுள்ளது என்றும் கூறியுள்ளார்கள். இதனைத்தொடர்ந்து இவ்வாறு தோன்றும் அறிகுறிகள் தடுப்பூசி செயல்படுவதற்கான நிலை என குறிப்பிட்டுள்ளார்கள். இந்நிலையில் நிபுணர்கள், covid 19 தடுப்பூசி போடப்பட்ட பெண்களுக்கு நான்கு வாரங்களுக்கு மார்பக சோதனையான மேமோகிராம் மற்றும் பயாப்ஸி செய்ய வேண்டாம் என்று மருத்துவர்களை கேட்டுக்கொண்டார்கள்.