Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கொரோனா தடுப்பூசி போடாவிட்டால் ஊதியம் இல்லை…. அதிரடி அறிவிப்பு!!

கொரோனா தடுப்பூசி போடாவிட்டால் ஊதியம் இல்லை என மின்வாரிய ஊழியர்களுக்கு மதுரை மண்டல பொறியாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

மதுரை மண்டலத்துக்கு உட்பட்ட மின்பகிர்மான வட்டங்களில் பணிபுரியும் ஊழியர்கள் டிசம்பர் 7ஆம் தேதிக்குள் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.. டிசம்பர் 7க்குள் கொரோனா முதல் மற்றும் இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தாத அலுவலர், பணியாளரின் டிசம்பர் மாத ஊதியம் வழங்கப்படாது என தலைமை பொறியாளர் தெரிவித்துள்ளார். மதுரை மண்டலத்தில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களின் எண்ணிக்கை மிக குறைவாக உள்ளது.. இந்த நிலையில் கொரோனா தடுப்பூசி போடாவிட்டால் ஊதியம் இல்லை என்று மதுரை மண்டல பொருளாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்…

நேற்று கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் பள்ளி, கல்லூரி, வணிக நிறுவனங்கள், உணவகங்கள், திரையரங்குகள் என்று பல்வேறு பொது இடங்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாதவர்கள் செல்லக்கூடாது என்று தடைவிதித்திருந்தார்.. தற்போது தடுப்பூசி போடாவிட்டால் ஊதியம் இல்லை என்று மின்வாரிய ஊழியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Categories

Tech |