Categories
உலக செய்திகள்

கொரோனா தடுப்பூசி போட்டபோது…. கவனக்குறைவால்…. 4 பேருக்கு நேர்ந்த நிலை….!!

கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டுள்ளனர். 

ஜெர்மனியில் கொரோனோவிற்கு எதிரான தடுப்பூசி போடும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் வடக்கு ஜெர்மனியின் கடற்கரை பகுதி Stralsund என்ற நகரில் தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  இதுகுறித்து நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில் கொரோனா தடுப்பூசி அளவுக்கு மீறி அளிக்கப்பட்டுள்ளதால் இப்பிரச்சனை உருவாகி உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் Stralsund பகுதியிலுள்ள முதியோர் இல்லத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தற்போது தடுப்பூசி அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இங்கு இருக்கும் முதியோர் காப்பகம் ஒன்றில் எட்டு ஊழியர்களுக்கு செலுத்தப்பட்ட தடுப்பூசியில் அளவை விட 5 மடங்கு அதிகமாக அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கவனக்குறைவாக இது நடந்துள்ளது என அதிகாரிகள் கூறியுள்ளனர். இதற்கிடையே தடுப்பூசி போடப்பட்ட 8 நபர்களில் 4 பேருக்கு காய்ச்சல் தொடர்பான அறிகுறிகள் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில் இந்த பாதிப்பானது தனிப்பட்ட தவறுகளால் நிகழ்ந்துள்ளது என்றார். மேலும் பாதிக்கப்பட்டவர்கள் எவருக்கும் தீவிரமான எந்த பக்கவிளைவுகளும் ஏற்படாது என்று நம்புகிறோம் என்றும் தெரிவித்துள்ளார். அந்த நான்கு பேரின் நிலை குறித்த தகவல் தற்போது வரை வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |